அலுவலகத்தின் முன்பு சாலைப்பணியாளர் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு கவன ஈர்ப்பு வாயிற்கூட்டம் நடத்தினர். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் பணி வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் பணிக்காலத்திலும் உயிர்நீத்த சாலைப்பணியாளர்களின்
வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி, தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு செல்லும்படி கவனயீர்ப்பு கூட்டத்தை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நெடுஞ்சாலை அலுவலகத்தின் முன்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் சாலைப்பணியாளர் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு கவன ஈர்ப்பு வாயிற்கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டம், மணிகண்டன் அவர்கள் தலைமையிலும், K.வெள்ளியங்கிரி,M.சான்பாட்ஷா
,M.வெற்றிவேல், K.இடும்பன் போன்றவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ச.ஜெகநாதன், V.சின்னமாரிமுத்து, K.பத்மநாதன், P.பாலசுப்பிரமணியன் ,M.அய்யாசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.