பொள்ளாச்சியில் கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக ஆண்டு பேரவை கூட்டம்..!!
பொள்ளாச்சி ராஜ்மஹாலில் கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக ஆண்டு பேரவை கூட்டம் ஏப்ரல் 28ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த ஆண்டு பேரவை கூட்டம் m.பரமசிவம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காளியப்பன் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிக்கு n.சரவணகுமார் வரவேற்பு உரையும் c.பத்மநாபன் துவக்க உரை யாகவும் சிறப்புரை யாக m. ஆறுமுகம் நயினார் அவர்களும் நன்றி உரையாக பொன்னுச்சாமி அவர்களும் பேசினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் முருகேசன் கருணாகரன், சலீம், காந்தி, ராஜாமணி போன்றவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.