பொள்ளாச்சியில் திருநங்கைகள் தர்ணா..!!

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு  திருநங்கைகள் கூட்டமாக வந்தனர். அவர்கள் திடீரென அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 80 திருநங்கைகள் வசிக்கின்றனர்.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு திருநங்கைகள் 25 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இதில் 3 பேர் மட்டுமே வீடு கட்டி உள்ளனர். 22 பேர் வீடு கட்டுவதற்கு அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் அஸ்திவாரம் கூட கட்ட முடியாத நிலை உள்ளது.

இதனால் முதல்-அமைச்சர் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற முடியவில்லை. இதுவரை திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகளும் ஒதுக்கப்படவில்லை.  சப்-கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பொள்ளாச்சியில் உள்ள திருநங்கைகள் சுயதொழில் தொடங்க ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட சப்-கலெக்டரிடம் உதவி கேட்டோம். ஆனால் எந்த உதவியும் செய்யவில்லை. இதனபின்னரும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, சப்-கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. அதில் அதிக மனுக்கள் கொடுத்தும், பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். ஆனால் அந்த திட்டங்களை சரியாக செயல்படுத்துவதில்லை. இதேநிலை தொடர்ந்தால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்கா
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp