பொள்ளாச்சி கோவை ரோடு சிடிசி மேடு அண்ணா காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் புதிய பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டிட வேலைக்காக தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு மேற்கூரை தகரம் பொருத்தி வீடு கட்டி தரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்காத மேற்கூரை தகரம் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதியில் உள்ள உயரழுத்த மின் கம்பங்கள் மீது மோதியுள்ளது.
ஏற்கனவே மின்கம்பங்கள் நிலை மோசமாக இருந்த காரணத்தால் தகர சீட்டுகள் காற்றில் வேகமாக வந்து அடித்தது மோதியதில் மின்கம்பங்கள் சாய்ந்த தாக கூறப்படுகிறது மின்கம்பங்கள் சாய்ந்ததில் மூன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் தேசமாயின இந்த நிகழ்வுக்கு முன்பே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து இப்பகுதியில் பொதுமக்கள் கூறுகையில் குடியிருப்பு மத்திய பகுதியில் உயர் மின்னழுத்த லைன் செல்கிறது இதை தாங்கிப் பிடிக்கின்ற கம்பங்களை ஐந்தாண்டுக்கு ஒரு முறையாவது பழுது பார்க்கப்பட வேண்டும் ஆனால் இதுவரை ஒருமுறைகூட பழுது பார்க்கப்படவில்லை மின்கம்பங்கள் அடியில் துருப்பிடித்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர்.
-M.சுரேஷ்குமார்.