கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை
அம்பராம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டி மல்லன்புதூர் தொடக்கப்பள்ளியில் உலக பூமி தினம் கடைபிடிப்பு
அற்புதங்கள் நிறைந்த இந்த பூமியில் மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்று மாசடைந்து, காற்றின் தனித்தன்மையை இழந்து கொண்டுவருகிறது. எனவே இவ்வாறாக போனால், இந்த பூமியில் உலக உயிர்கள் வாழ்வது என்பது கேள்விக்குறியாகிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
எனவே இந்த இக்கட்டான சூழலை நம்முடைய பிற்கால சந்ததியினர் சந்திக்க வேண்டியதிருக்கும் இதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.
1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக ‘பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்த வகையில் கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள அம்பராம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிமல்லன்புதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இளைஞர்களின் சார்பாக உலக பூமி தினம் ஏப்ரல் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப்பட்டது. அப்பொழுது பள்ளி மாணவர்களிடம் உலக பூமி தினம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் சஞ்சய் மோஹிந்த்
சுதிஸ்,மனோஜ்,ஜீவா,மணிகண்டன் போன்ற கெட்டிமல்லன்புதூர் இளைஞர்கள் கலந்துகொண்டர் சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-அலாவுதீன் ஆனைமலை..