தமிழக முதலமைச்சரால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்ட பொள்ளாச்சி மேம்பாலம்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் சாலையில் மகாலிங்கம் கல்லூரி அருகே அமைந்துள்ளது இந்த பாலம். மேம்பால பணிகள் பல நாட்களாக நடந்து வந்த நிலையில் இறுதிப் பணிகள் முடிவடைந்தநிலையில் முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலம் அந்த பகுதி மக்களுக்கு மட்டும் இல்லாமல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கும் மனநிம்மதியை தரும் என்பதில் மாற்றமில்லை. இந்த பாலம் அமைப்பதற்கு முன்பு இந்த இடத்தில் ரயில்வே கிராசிங் இருந்து வந்தது. அதனால் வாகன நெரிசல்கள் பல மணி நேரங்கள் சொல்லித் தீராத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக அமைக்கப்பட்ட துதான் இந்த பாலம். இந்த பாலம் பொள்ளாச்சியில் விடியல் என்று கூட சொல்லலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன்,ஆனைமலை.