பொள்ளாச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஏப்ரல் 20ஆம் தேதி நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் கவனத்திற்கு செல்லும்படியாக பல்வேறு கோரிக்கைகளான
1. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
3. கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட சரண் விடுப்பு
ஒப்புவிப்பு மேலும் காலம் குறிப்பிடாமல் தடை செய்ததை உடன் திரும்பப் பெற
வேண்டும்.
4. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட
வேண்டும்.
5. தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்ற்கும் மேற்பட்ட காலிப்
பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி வட்ட கிளை தலைவர் பத்மநாபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் கோரிக்கை விளக்க உரையை சின்ன மாரிமுத்து அவர்கள் உரையாற்றினார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க p.மணிகண்டன் நூலகத்துறை அலுவலர் சங்கத்தினர் மற்றும் அனைத்து ஓய்வூதியத் துறை சங்க செயலாளர் சுப்பிரமணி மற்றும் இறுதியில் நன்றி உரையாக சத்துணவு ஊழியர்களின் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.