கோவை போத்தனூர் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் போத்தனூர் காவல்துறையினர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
இதில் திமுக, அதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பல கட்சிகளும் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர தெற்கு காவல் உதவி ஆணையர் கூறுகையில்:
போத்தனூர் பகுதியில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் போராட்டம் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்த வேண்டும். மேலும் புதிதாக எந்தெந்த பகுதியில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்த விரும்பும் இடங்களை அரசியல் கட்சிகள் கூறுங்கள், அதை நான் குறித்துக் கொண்டு மாநகர ஆணையரிடம் சமர்ப்பித்து அவர்களின் ஆலோசனைப்படி பகுதிகளின் அதிகாரப்பூர்வ தகவல் வரும்.
முடிந்தவரை பிளக்ஸ் பேனர்களை தவிர்த்துவிடுங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களில் கண்டிப்பாக பிளக்ஸ் பேனர்களை வைக்க வேண்டாம். ஜனநாயக நாட்டில் அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்ட உரிமைகள் அனைவருக்கும் பொது இதை கண்டிப்பாக இங்கு உள்ள அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவும் ஜனநாயக முறைப்படி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய அத்தனை ஒத்துழைப்பும் காவல்துறை சட்டத்துக்கு உட்பட்டு உங்களுக்கு செய்து கொடுக்கும்.
அனுமதிக்கப்படாத பகுதிகளில் ஆர்ப்பாட்டம் போராட்டமும் தெருமுனைப்பிரச்சாரம் போன்றவற்றை நடத்தக் கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும், என்று கூறினார்.
போத்தனூர் காவல் ஆய்வாளர் கூறுகையில்:
அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை பதிவு செய்ய முறையாக காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் அனுமதி பெற்றுதான் கண்டிப்பாக உங்களுடைய எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் கோவை மாநகர் தெற்கு காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் உதவி ஆய்வாளர்கள் முருகேசன், தாமரை கண்ணன் மற்றும் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியாக கூட்டத்தை போத்தனூர் ஆய்வாளர் அவர்கள் பேசி முடித்தார்.
-ஈஷா ராஜேந்திரன்.