கோவை மாவட்டம் போத்தனூர் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அங்குள்ள தடுப்பு சுவர்களளும் சாலையில் படிந்துள்ள மண் கற்களாலும் அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்று மாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவர் மண் சறுக்கியதால் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான அவரை மீட்டு அவசர சிகிச்சை
ஊர்தியில் ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது கூட்டநெரிசல் ஏற்பட்டதால் சாலையில் பயணிக்கும் மற்றொரு வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பெண் ஒருவர் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் இருவரும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதுபோன்ற விபத்துகள் பாலத்தில் அடிக்கடி நடப்பதால் நகராட்சி நிர்வாகம் பாலத்தின் மீது இருக்கும் தடுப்புச் சுவரையும் சாலையில் படிந்துள்ள மண் கற்களையும்
அகற்றி தரவேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, செய்யது காதர்.