பொள்ளாச்சி அடுத்துள்ள
ஆவல் சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்த
தோட்ட உரிமையாளர் செந்தில்.
பழனியில் இருந்து வைக்கோல் ஏற்றி
வேன் மூலமாக தோட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
செல்லும் வழியில் மின்சார கம்பி பட்டதில் வைக்கோலில் தீ பற்றியது.
தீ வேகமாக பரவி பற்றி எரிய தொடங்கியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர்.
தோட்டங்களின் அருகில் உள்ள மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனை சரி செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்!!
கண்டு கொள்ளுமா மின்சாரத் துறை என்ற கேள்விகளோடு
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.