உக்ரைன் ரஷ்யா போர் இடையில் பல விதமான விலை உயர்வு ஏற்படுகின்றன. கச்சா எண்ணெய் பெட்ரோல் கோதுமை போன்ற பொருட்கள் நாடு முழுவதும் விலை உயர்ந்து வருகிறது. இதன் வரிசையில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் கட்டுமான மூலப்பொருட்கள் விலை அடுத்தடுத்து உயர்ந்து வருகிறது இதனால் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வை அறியும் மக்கள் மற்றும் பொறியாளர்கள் ரெடி மிக்ஸ் காங்கிரட் இன் விலை மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை இன்னுமும் மிகவும் குறைவான விலையிலேயே ரெடி மிக்ஸ் காங்கிரட்டை மக்களும் கட்டிடப் பொறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகையால் ரெடி மிக்ஸ் காங்கிரட் உரிமையாளர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர் மற்றும் தொழில் ரீதியாக பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர் மக்கள் சற்று உணர்ந்து விலை உயர்வை உணர்ந்து கட்டிட பொறியாளர்களுக்கு உதவிட முன் வர வேண்டுமென்று பொறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களும் கட்டிடப் பொறியாளர்கள் இணைந்து விலை உயர்வை உணர்ந்து ரெடி மிக்ஸ் காங்கிரட் உண்டான விலையை கொடுக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.