கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் வெத்தல பாக்கு முத்துசாமிக் கவுண்டர் மகன் குமார் தோட்டத்தில் வேலை செய்யும் 27 வயது மதிக்கத்தக்க ஆதிவாசி பெண் நேற்று இரவு 50 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு நீண்ட நேரம் தேடியும் சடலம் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை நாகன் என்பவர் தன் நண்பருடன் இணைந்து கிணற்றில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுதும் சடலம் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முத்துசாமிபுதூர் வழுக்குமர சின்னன் என்பவர் விரைந்து சென்று கிணற்றில் குதித்து தேடிய பொழுது சடலம் கிடைத்தது.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாலக்காடு ஜில்லா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து மீனாட்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்