வேலூர் மாவட்டம், குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்களின் உத்திரவுப்படி 17-04-2022 ந்தேதி காவல் ஆய்வாளர் திரு.சதீஷ் வழிகாட்டுதல்படி காவல் உதவி ஆய்வாளர் திரு.மோகன், தலைமையில் தலைமை காவலர் திரு.சிவசுப்ரமணியன், முதல் நிலை காவலர் திரு. சதீஷ்குமார்,மற்றும் காவலர் மோகன் ஆகியோர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைசாவடி பகுதியில் நடத்திய வாகனசோதனையில் TN04M9945 என்ற ஈச்சர் வாகனத்தில் சுமார் 5500கிலோ ரேசன் அரிசியை (110மூட்டைகள்) காலியான தக்காளி கூடைகளுக்கு நடுவில் வைத்து ஆந்திரா மாநிலத்திற்கு நூதனமுறையில் கடத்தி செல்ல வந்தது தெரியவந்தது..
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான வேலூர் அப்துல்லா புரம், மோட்டூர் பகுதியை சேர்ந்த
1) மணிகண்டன் (36) த/பெ குப்பன்
2) கருணாகரன்(33) த/பெ ஏகாமபரம் என்ற இருவரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-P. இரமேஷ் வேலூர்.