வால்பாறை அடர்ந்த வனப்பகுதியில் தொழிலாளர்கள் விறகு தேடி செல்வதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் அதிகமாக உலா வருகின்றன. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, இயற்கை வளங்களையும், வனத்தையும் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
அக்காமலை கிராஸ் ஹில்ஸ், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது, இந்நிலையில், சமீப காலமாக வால்பாறை மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில், தொழிலாளர்கள் விறகு தேடி செல்வது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் வன விலங்குகளின் பிடியில் சிக்கி உயிர்பலியாகின்றனர். அதனால் வால்பாறையில் இருக்கக்கூடிய எஸ்டேட் பகுதி மக்கள் பிறகு தேடி வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாமென வன அதிகாரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சுரேஷ்குமார் ராஜேந்திரன்.