அம்பராம்பாளையம் அரபிக் கல்லூரியில் மாபெரும் புனித ஹஜ் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்…!!! ஆனைமலை வட்டம் அம்பராம்பாளையத்தில் பொள்ளாச்சி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையும் அம்பராம்பாளையம் அரபிக் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாபெரும் புனித ஹஜ் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் சனிக்கிழமை இன்று அம்பராம்பாளையம் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு அரபிக்கல்லூரி செயலாளர் அல்ஹாஜ். J. காஜாமைதீன் அவர்கள் தலைமை தாங்கினார் ஹஜ் பயிற்சி மற்றும் சிறப்புரை A.U. அபூபக்கர் உஸ்மானி அவர்கள் வழங்கினார் பொள்ளாச்சி வட்டார அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர் பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்ற பலர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.