கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணைப் பகுதிக்கு கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ராமர் தன் நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீராமர் ஆழியார் அணை பகுதியில் தண்ணீர் அதிகம் உள்ள இடத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்ததை கண்ட சக நண்பர்களில் ஒருவரான கோவை தனியார் அறிவியல் கல்லூரியில் படிக்கும் நவீன் குமார் தன் நண்பனை காப்பாற்ற முற்பட்டுள்ளார். முயற்சி தோல்வியில் முடிந்து இருவரும் தண்ணீரில் மூழ்கி மாயமானார்கள். இது குறித்து தகவலறிந்த பொள்ளாச்சி தீயணைப்புத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் தேடலில் இருவரையும் பிணமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட உடல்களை பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து கோட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.