இனி, ஆதார் விபரம்; பரம ரகசியம்!- மத்திய அரசு அறிவுரை!!

   மக்களின் ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக, முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட ஆதார் கார்டு நகலைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உங்கள் ஆதார் கார்டின் புகைப்பட நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இது ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

மாற்றாக, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும் ஆதாரின் புதிய வெர்ஷனை பயன்படுத்தவும். இதனை, யு.ஐ.டி.ஏ.ஐ என்ற ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in பக்கத்தில், `முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட ஆதார் வேண்டுமா?’ என்பதைத் தேர்வுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மத்திய அரசின் அறிக்கை:
அதுமட்டுமல்லாமல் இன்டர்நெட் கஃபே-வில், தங்களின் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்ய பொது கணினிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். ஒருவேளை அப்படிச் செய்தால், அந்த கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இ-ஆதார் குறித்த அனைத்து தகவல்களையும் நிரந்தரமாக நீக்குவதை உறுதிசெய்யவும்.

யு.ஐ.டி.ஏ.ஐ-லிருந்து பயனர் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே தகவலுக்காக ஒரு நபரின் ஆதாரைப் பயன்படுத்த முடியும். ஹோட்டல்கள் அல்லது தியேட்டர்கள் உள்ளிட்ட உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ, வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் அது ஆதார் சட்டம் 2016-ன் கீழ் குற்றமாகும். ஒரு தனியார் நிறுவனம் உங்கள் ஆதார் கார்டை பார்க்க விரும்பினாலோ அல்லது உங்கள் ஆதார் கார்டின் நகலைப் பெற விரும்பினாலோ யு.ஐ.டி.ஏ.ஐ-யிடமிருந்து சரியான பயனர் உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– Ln.இந்திரதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp