நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை திருச்செங்கோட்டிலிருந்து எடப்பாடி நோக்கி புறப்பட்டது. .
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் கோழிகடை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமா வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து சற்றும் வேகத்தை குறைக்காமல் முன்னால் சென்ற இரு சக்கர வாகனங்களை முந்தி செல்ல முற்பட்டபோது
எதிர் திசையில்,எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மீது நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதியது.
இதனால் இரண்டு பேருந்துகளும் அப்பளம் போல நொறுங்கி, சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்திட்ட இந்த விபத்தில், தனியார் கல்லூரி பேருந்தில் வந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்
இது குறித்து காவல்துறையினர்,விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியான இந்த சம்பவத்தை காட்சிபடுத்தி பதைபதைக்கவைத்துள்ளது.
செய்தியாளர்
-கலையரசன் மகுடஞ்சாவடி.