பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவையில் சமத்துவ மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கோவை செஞ்சுலுவை சங்கம் முன்பாக மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரிகுறைப்பு செய்திடவும், பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தியும், தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கோவை மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
– சீனி,போத்தனூர்.