சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நிலவாரப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. நிலவரப்பட்டி மூலக்காடு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த வாரத்திலிருந்தே விழாக்கமிட்டியினர் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியினை சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர்.சிவலிங்கம்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்,பனைமரத்துப்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார்
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத்தலைவர் முனைவர் பி.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் இடம்பெற்றுள்ளது.
காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து திமிறி எழுந்து சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் ஏறுதழுவி குறைந்த அளவில் பரிசுகளை பெற்று வருகின்றனர்.
பயிற்சி பெற்ற ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்களின் தழுவலில் அடங்காமல் வெற்றி பெற்று
பரிசுகளை அள்ளிக்குவித்து வரும் காளைகளால் அதன் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆரவாரமாக இருகின்றனர்.
பள்ளி விடுமுறை என்பதால் சேலம் மாநகரத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை காண சேலம் மற்றும் நாமக்கல் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். சேலம் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ச.கலையரசன்,மகுடஞ்சாவடி.