மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சுகாதாரத் திருவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். மருத்துவத்துறையின் மதுரை மாவட்ட துணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலூர் வட்டாட்சியர் இளமாறன்,
கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆணையர் செல்லப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமமூர்த்தி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
முகாமில் பொதுமக்களுக்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்து ஆலோசனைகளையும், சிகிச்சையினையும் சிறப்பான முறையில் வழங்கினார்கள். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர்களும் கலந்து கொண்டு தேவையான சிறப்பு மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சையினையும் வழங்கினார்கள்.
முகாமில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
முகாமில் புதிதாக இருதய எக்கோ பரிசோதனை தேவையான நோயாளிகளுக்குச் செய்யப்பட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவத் திருவிழா ஏற்பாடுகளை கருங்காலக்குடி வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெகு சிறப்பாகச் செய்திருந்தனர்.
– மதுரை வெண்புலி.