பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உலகப்பிரசித்தி பெற்ற அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் உள்ளது ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கடந்த ஆண்டு இக்கோயில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,
ஆனால் மாற்று மதத்தினர்தான் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக இந்து அமைப்பினர் புகாரளித்தனர்
இதை சாதகமாக பயன்படுத்தி பாஜக முக்கிய பிரமுகரும் யூ டூயூப்பருமான கார்த்திக் கோபிநாத் என்பவர்
தமிழக அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் அரசு கோவிலான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு புதிய சிலை அமைத்து புனரமைக்க வசூல் வேட்டையில் ஈடுபட்டார்,
இதன் தொடர்ச்சியாக சுமார் ரூ 50 லட்சத்திற்கும் மேல் இணையதளம் வாயிலாகவும் நேரிலும் பெறப்பட்டது தெரியவந்தது இந்த நிலையில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சென்னை ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.
அவரிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திக் கோபிநாத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் ஆவர் நி தி அமைச்சர் நிர்மலாசீதாராமன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்த புகைப்படங்களை இவர் அவ்வப்போது இணையத்தில் உலாவிட்டு புகழ் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதம் மற்றும் ஜாதியின் பெயரால் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்துவரும் இதுபோன்ற நபர்களை கடும் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ச.கலையரசன், மகுடஞ்சாவடி.