கோவை பி.என்.புதுார் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் ராம் கணேஷ், 22. கல்லுாரியில் எம்.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். சம்பவத்தன்று இவர் பி.என்.புதுார் மாரியம்மன் கோவில் விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த மற்ற வாலிபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பி.என்.புதுார் நாயக்கர் வீதியை சேர்ந்த அருள் பிரகாஷ், 28, கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ், 23, ஆகியோர் ராம் கணேஷை சரமாரியாக தாக்கினர்.தாக்குதலில் ராம் கணேசுக்கு கத்தி காயம் ஏற்பட்டது இவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
–அருண்குமார் கிணத்துக்கடவு.
