கோவையில் எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்கள், அரிமா மாவட்டம் 324 பி 1 செல்வராஜன் இரத்த வங்கி,ரோட்ராக்ட் டெக்ஸ்சிட்டி உட்பட பல்வேறு இரத்த வங்கிகள் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் என பலர் இரத்த தானம் வழங்கினர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு உயிர் காக்க இரத்தத்தின் தேவை அறிந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர் இரத்ததானம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்கள் மற்றும், அரிமா மாவட்டம் 324 பி 1 செல்வராஜன் இரத்த வங்கி,ஐ.எம்.ஏ.இரத்த வங்கி,குமரன் மெடிக்கல் இரத்த வங்கி, கே.ஜி.மருத்துவமனை இரத்த வங்கி, ஆகியோர் இணைந்து குரும்ப்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ்.பிசியோதெரபி கல்லூரி வளாகத்தில் மெகா இரத்ததானம் முகாம் நடைபெற்றது..கல்லூரியின் முதல்வர் ராஜா செந்தில் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,கோவை மாவட்ட அரிமா 324 சி மாவட்ட பி.ஆர்.ஓ.மற்றும் நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராகவும்,
சிறப்பு அளிப்பாளர்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் டாக்டர் பழனிசாமி,தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன்,ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயமுத்தூர் டெக்ஸ்சிட்டி தலைவர் வரலட்சுமி,அட்வைசர் தங்கபாண்டியன்,ஈவெண்ட் மேனேஜர் அர்ஜூன்,நேரு நகர் அரிமா சங்க நிர்வாகிகள் ஹரீஷ் பாஸ்கர்,செமிக் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில்,எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் பல்வேறு துறை கல்லூரிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இரத்ததானம் செய்தனர்..முகாமில்,பிசியோதெரபி கல்லூரி அசோசியோட் புரொபஸர் சுமித்ரா,பொறியியல் கல்லூரி இணை பேராசிரியர்கள் கௌசிக ராமன் ,ஸ்ரீ லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..இதில் கல்லூரி பேராசியர்கள்,ஊழியர்கள் ஆகியோர்,தாமாக முன்வந்து இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்..முகாம் ஒருங்கிணப்பாளர்கள் கூறுகையில்,முதன் முறையாக இது போன்ற முகாம் இங்கு நடைபெறுவதாகவும்,தானத்திலேயே சிறந்த தானம் இரத்த தானம் என்ற அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் உதவும் அடிப்படையில், இந்த முகாமை நடத்தியிருப்பதாக தெரிவித்தார்.
– சீனி,போத்தனூர்.