கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. காக்னிசன்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி,கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிச்சாமி,கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் அருண் பழனிச்சாமி, தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் பிரபா,கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப துறையை சேர்ந்த 425 பேர் இளங்கலை பட்டதாரிகளாக 8 பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்கள் உட்பட 649 பட்டதாரிகள் பட்டங்களை வழங்கினர்.தொடர்ந்து 175 மாணவர்கள் முதுகலை பட்டங்களை பெற்றனர்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் ராம்குமார் ராமமூர்த்தி சிக்கல்களைத் தீர்ப்பது ,அறிவு, பரிமாற்றம், புத்தகம், ஆக்கப்பூர்வமான சிந்தனை தொழில்நுட்பம்,புதிய உலகத்திற்கான கண்டுபிடிப்பு மற்றும் மாணவர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஏற்படும் தாக்கம் போன்ற அம்சங்களை எடுத்துரைத்தார். கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி மாணவர்கள் மத்தியில் பேசிய போது பொருளியல் கொள்கைகளை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளவும்,பொறியியல் மாணவர்களுக்கு அணுகக் கூடிய பல்வேறு வழிகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார்.
– சீனி,போத்தனூர்.