கோவை ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிபட்டி இடையே நான்கு வழிச்சாலை உள்ளது. மேம்பாலங்களின் கீழ் சர்வீஸ் சாலை செல்கிறது. அங்கு மழைநீர் செல்வதற்காக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம், ஆச்சிபட்டி வரை உள்ள மழைநீர் வடிகால் மீது நடைபாதையை வியாபாரிகள் உள்பட பலர் ஆக்கிரமித்தனர்.
இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால் மீது ஆக்கிரமித்த வியாபாரிகளிடம் பொதுமக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “மழைநீர் வடிகால் மீது ஆக்கிரமிப்பு அனைத்தையும் வியாபாரிகள் ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கி பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் .