கோவை மாவட்டம் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 10 மணி அளவில் வெப்பச்சலனம் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி கொள்வதோடு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறுவதால் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு சாலைகள் குண்டும் குழியுமான நிலையில் திடீரென பெய்த மழையால்,
தேங்கியுள்ள தண்ணீரில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் உள்ளதால் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இது ஒருபுறமிருக்க கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா. சையது காதர்.