கோவை மாவட்ட சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் . தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக விளையாட்டு மேம்பாடரடு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, கோவை மாவட்ட சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக வருடாந்திர பொதுக்குழு கூட்டம் ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் நடைபெற்றது.. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் நிர்வாகிகள் சுதாகர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் அசோசியேசன் கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர ராவ் கலந்து கொண்டார்.
இதில் முக்கிய தீர்மானங்களாக , தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும்,மேலும் தமிழக அளவில் சிலம்பம் விளையாட்டு சங்கம்,கழகம் போன்ற பெயர்களில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் சங்கங்களை தடை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேச மாவட்ட தலைவர்,செல்வகுமார்,சிலம்பம் விளையாட்டை 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்த்துள்ளதால்,சிலம்பம் கற்று கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாகவும்,தமிழக அரசு முறையற்று செயல்படும் சங்கங்களை வரைமுறைபடுத்திவதன் மூலம்,சிலம்ப கலையில் தமிழகம் இன்னும் பல சாதனைகளை புரிய முடியும் என தெரிவித்தார்.பொதுக்குழு கூட்டத்தில் சரவணம்பட்டி,வடவள ளி,கணபதி,சூலூர் என கோவை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.