மதுவிலக்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1226 மது பாட்டில்கள் பறிமுதல்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை. காளியாபுரம் கந்தசாமி கவுண்டர் வீதியில் உள்ள சரோஜினி என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது குறித்து மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை உறுதி செய்தனர் இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த 1226 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு இதற்கு பயன்படுத்திய மாருதி கரையும் பறிமுதல் செய்தனர் மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சரோஜினி என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கு துணையாக இருந்த சரோஜினியின் மகன் திருமலைசாமி தப்பியோடி தலைமறைவானார் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ஒரு லட்சத்து 62 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.