கொரோனா பரவல் உள்ள 16 நாடுகளில் மீண்டும் பரவல் காரணமாக அந்த நாடுகளில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பாஸ்போர்ட் பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நாடுகளின் பட்டியல் சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ, லிபியா, வியட்நாம், இந்தோனேஷியா, ஆர்மீனியா, பெலாரஸ், மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளாகும்.
மேலும் அரபு அல்லாத நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் சவுதிகளின் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குனரகம் வலியுறுத்தியுள்ளது மேலும் இந்த தடை சவுதி குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவே அங்குள்ள இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிகின்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.