வேலூர் மாவட்டம்; பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடியில், சென்னைக்கு கடத்த முயன்ற சுமார் 500 கிலோ புகையிலை , தனிப்படையினர் கைப்பற்றினர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன் IPS.,அவர்கள் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் தலைமையில் தலைமை காவலர் சாம் சந்திரசேகர், காவலர்கள் அன்பழகன் மற்றும் சத்ரியன் ஆகியோர்கள் இணைந்து, பள்ளிகொண்டா சுங்க சாவடி வழியாக சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மேகாராம்(24) S/o பீமாஜி மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷமிர் கான் (31) S/O பசன் கான் ஆகிய இருவரை TN-14 U-6511 TATA Harrier என்ற காருடன் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 500 கிலோ அதன் மதிப்பு சுமார் 5 லட்சம்,இதனை பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
-P.இரமேஷ் வேலூர்.