நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, கோடை விழா 7ம் தேதி தொடங்கப்படவுள்ளது. மேலும் கோடைவிழா நிகழ்ச்சி குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளும் மேற்கொண்டு வருகின்றன.
அதனின் அட்டவணை கீழ்வருமாறு:
07.05.2022 முதல் 08.05.2022 வரை: காய்கறி கண்காட்சி, நேரு பூங்கா, கோத்தகிரி
07.05.2022 முதல் 31.05.2022 வரை: புகைப்பட கண்காட்சி, சேரிங் கிராசிலுள்ள தோட்டக்கலைத்துறை அரங்கம்.
13.05.2022 முதல் 15.05.2022 வரை: வாசனை திரவிய கண்காட்சி, கூடலுார்.
14.05.2022 முதல் 15.05.2022 வரை: ரோஜா மலர்க்கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்கா
19.05.2022: படகுப்போட்டி, ஊட்டி ஏரி
20.05.2022 முதல் 24.05.2022 வரை: ஊட்டி மலர்க்கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்கா
28.05.2022 முதல் 29.05.2022 வரை: பழக்கண்காட்சி, குன்னுார் சிம்ஸ் பூங்கா
18.05.2022 முதல் 24.05.2022 வரை: கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர் கலாச்சார மையம்
25.05.2022: கலை நிகழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா
18.05.2022 முதல் 31.05.2022: கலை நிகழ்ச்சிகள், ஊட்டி படகு இல்லம்
18.05.2022 முதல் 31.05.2022 வரை: மகளிர் சுய உதவிக்குழு, ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஆவின், இன்க்கோ சர்வ், டான்டீ போன்றவற்றின் பொருட்காட்சி, ஊட்டி பழங்குடியினர் கலாச்சார மையம் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாட நல்ல நிகழ்ச்சிகள் மக்களே!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.