தமிழகத்தில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்,
கோமங்கலம்புதூர் கிராமத்தின் நுழைவுவாயிலாக ”பங்களா என்னும் பாரம்பரியமிக்கதும், பெருமை வாய்ந்த
கட்டிடம் கோமங்கலம்புதூரில் உள்ளது. இது பண்டைய காலத்தின் ‘பங்களாகோர்ட்’ ஆகவும் செயல்பட்டுவந்துள்ளது.
இந்த பங்களா கோர்ட் கட்டிடம் தற்சமயம் பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, மே 5 ஆம் தேதி வியாழக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு ஊர் பெரியவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.