கோவை மாவட்டம் ஆனைமலை பகுதிக்குட்பட்ட ஆத்து பொள்ளாச்சி என்ற கிராமத்தில் 29.7.1936 இல் பிறந்த இவர் சுப்பிரமணியம் என்ற தன் பெயரை கவிதைக்காக சிற்பி என்று புனைபெயர் வைத்துக் கொண்டார் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார் சாகித்ய அகாதமி விருது, தமிழ்நாடு அரசின் பரிசுகள், பாவேந்தர் விருது, மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார் தன் பெயரில் ஒரு கவிதை அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் இளங்கவிஞர் ஒருவரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி பாராட்டி வருகிறார்.
இவருக்கு தமிழக அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது அதைப் பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பொள்ளாச்சி என் ஜி எம் கலை அறிவியல் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் அவர் எழுதிய வேரும் விழுதும் என்ற கவிதை நூலின் முதல் பிரதியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.