ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம். கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
கேரளா மலபார் டயரி ஃபார்மேர்ஸ் அசோசியேசன் பாலக்காடு மாவட்ட கமிட்டியின் தலைமையில் நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு நேற்று பாலக்காடு கோட்டை மைதானத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.
இதனை அடுத்து MDFA வின் மாநில துணை தலைவர் பாலு D நாயர் தர்ணா போராட்டத்தை முன்னின்று துவக்கி வைத்தார். இதனை அடுத்து பாலக்காடு கோட்டை மைதானத்தில் துவங்கி நடைபயணமாக பால் உற்பத்தியாளர்களின் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தனர்.
அங்கு பால் உற்பத்தியாளர்கள் தங்களுடை கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள்:
1. ஒரு லிட்டர் பாலுக்கு குறைந்தபட்ச விலையாக 50 ரூபாய் நிர்ணயம் செய்தல் வேண்டும்.
2. மாட்டுத்தீவனங்களுக்கு 30 சதவீதம் மானிய விலையில் சங்கங்கள் வழியாக நல்க வேண்டும்.
3. பிற மாநிலங்களிலிருந்து வரும் பாலினை பரிசோதனை மையம் அதாவது சோதனைச் சாவடி உள்ள வழிகளில் மட்டுமே கடந்து வர அனுமதிக்க வேண்டும்.
4. அனைத்து மதம் சார்ந்த பண்டிகை தினங்களில் உற்பத்தி செய்யும் பாலுக்கு மில்மா 30% விலை உயர்வு நல்க வேண்டும்.
5. பால் உற்பத்தியாளர்களுக்கு பென்ஷன் 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
6. இனப்பெருக்க விந்து கொள்கையில் அவ்வப்போது போது மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு கிரையோபாக்ஸில் மட்டும் விந்துவை எடுத்துவர கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டும்.
7. பிளாக் தளத்தில் மையப்பகுதியில் அனைத்து விதமான அதி நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையம் அமைத்தல் வேண்டும்.
8. தைரேலியோ அனாபிளாஸ்மா நோய்களுக்கான மருந்துகளை மருத்துவ மனை மூலம் வழங்க வேண்டும்.
9. வருடம் முழுவதும் உற்பத்தி செய்யும் பாலுக்கு இன்சென்டிவ் வழங்க வேண்டும்.
10. பால் உற்பத்தியாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் இலவச இன்சூரன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
11.கிராம பஞ்சாயத்து தளத்தில் மாடுகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.
12 .விவசாயிகள் உற்பத்தி செய்யும் முழு பாலையும் மில்மா சேகரிப்பதற்கான அட்டவணை கிடைக்க உறுதி செய்தல் வேண்டும் கோட்டா கன்வர்ஷன் சார்ஜ் இல்லாமல்,
13. கிராமீண தொழிலுறுதித் திட்டத்தில் பால் விவசாயிகளை பதிவுசெய்து வேலை உறுதி நடைமுறைப்படுத்த வேண்டும்.
14. பென்ஷன் பெரும் விவசாயிகளிடமிருந்து ஈவுத்தொகை ஈடாக்குவதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
15. கிராம பஞ்சாயத்து தளத்தில் கால்நடை ரத்த பரிசோதனை மையம் அமைத்தல் வேண்டும்,
16. கிராமப் பஞ்சாயத்து தளத்தில் அதிநவீன வசதிகள் பொருந்திய கால்நடை மருத்துவ வாகன திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
என்கிற16 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தர்ணா போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் MDFA வின் மாநிலச் செயலாளர் தாஜ் மன்சூர் A.K,
பாலக்காடு மாவட்ட தலைவர் முகம்மது பட்டாம்பி, பாலக்காடு மாவட்ட துணைத்தலைவர் வண்ணாமடை சிவக்குமார் மற்றும் மாநில மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பாலக்காடு மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மீனாட்சிபுரம் தர்மராஜ், மீனாட்சிபுரம் தியாகு குமார், வண்ணாமடை கிருஷ்ணகுமார்,வல்சலா டீச்சர், உஷா மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நாளை திருவனந்தபுரத்தில் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
-M.சுரேஷ்குமார்.