கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட புல்லுக்காடு பகுதியில் கழிவுநீர் பண்ணை உள்ளது. கழிவு பண்ணை அருகிலுள்ள புதருக்குள் சமூக விரோதிகள் குழுவாக சேர்ந்து போதை பொருள் பயன்படுத்துவதும் சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் கஞ்சா மாத்திரை போன்ற போதை பொருட்களை அதிகமாக அந்த இடங்களில் பயன் படுத்துகிறார்கள் என்ற தகவல் வெளியாகியதை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து சுத்தம் செய்யும் பணியை 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ அஹமது கபீர் MC அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிழ்வில் தமுமுக மமக (பொறுப்பு) தலைவர் சர்புதீன் தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
இதனை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்று வாழ்த்துகூறினர்.
நாளையவரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.