கோவை மாவட்டம் ஆனைமலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக மே 16ஆம் தேதி நேற்று பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு கல்வி வழங்கப்பட்டது. அதனையடுத்து அந்த சாலை வழியாக வாகனத்தில் பயணித்த பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கிருத்திகா அவர்கள் மற்றும் சுகாதாரஆய்வாளர்கள்.சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.