கோவை ஆவாரம்பாளையம் கோரை தோட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ்காரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதனை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
