சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ், 45. மனைவி ஜோதி; தனியார் பள்ளி ஆசிரியர். இரு மகன்கள் உள்ளனர்.நேற்று காலை புஷ்பராஜ் தனது இரண்டாவது மகனை பைக்கில், மதுக்கரை மார்க்கெட் ரோட்டிலுள்ள மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, பிளஸ் 2 பொது தேர்வு எழுத அழைத்து சென்றார்.
மகனை பள்ளியில் இறக்கி விட்ட பின், வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலத்திற்கு சுமார், 150 மீட்டர் முன்பாக, பைக்கின் ஒரு வீல் பஞ்சரானது.கட்டுப்பாட்டை இழந்த பைக், ரோட்டின் வலதுபுறத்திற்கு சென்று எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது. படுகாயமடைந்த புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.