கோவை பேரூர் தெற்கு பகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதி செல்வபுரம் தெற்கு ஹவுசிங்யூனிட் (சாலைப் பகுதி).
இங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அவர்கள் வாழ்ந்த இடத்தில் வீடுகளை இடித்துவிட்டு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்பு இலவசமாக கட்டிக் கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வாக்குறுதியின் அடிப்படையில் தாங்கள் வசித்த இடத்தை குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு கொடுத்தார்கள்.
அதற்காக தற்பொழுது வரை வேறு இடங்களில் அம்மக்கள் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். அடுக்குமாடி கட்டிடம் கடடி முடித்த பிறகு, தற்போது 92230 ரூபாய் கட்டவேண்டும் என்று கூறிய நிலையில், முதல் தொகையாக 12000 ஆயிரம் ரூபாய் கட்டினார்கள்.
ஆனால் இப்போது 80 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ரூபாய் 80 ஆயிரத்தை முழுமையாகக் கட்டினால் தான் அங்கு வசித்த மக்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும் என்று சொல்லும் அதிகாரிகள் முழுமையாக பணம் கட்டவில்லை என்றால் அந்த வீடுகளை வேறு நபர்களுக்குக் கொடுத்து விடுவதாகவும், அங்கு வாழ்ந்த ஏழை மக்களை நகரத்திற்கு வெளியே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் தற்போதைய நகர்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகள் மூலமாகத் மிரட்டுகுகிறார்கள்.
மேலும் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களான சுபாஷ் மற்றும் சிலர் பெண்களிடம் தரக்குறைவாக பேசியதை மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே அம்மக்களை அச்சுறுத்தக் கூடாது என்று சொல்லியும், அம்மக்களுக்கு அவர்கள் வசித்த இடத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி வீடுகளை இலவசமாக ஒப்படைக்க வேண்டும்.
என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் அதிகாரிகள் சமூகநீதி காட்ட வேண்டும். என்று கூறி இன்று கோவை செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து குடியிருப்பு வாசிகளுடன்
சிபிஐ எம்எல் கட்சியின் MS வேல்முருகன்exMC தலைமையில் ஹயாதுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர் எம். இப்ராஹிம் கல்லாமேடு மாகாளியம்மன் கோவில் தலைவர் சிங்காரம் காங்கிரஸ் கட்சியின் 79வது வட்டக் கழக தலைவர் ஜாபர் அலி, மமக மாவட்ட துணை செயலாளர் இப்ராஹிம் மேக்ஸ் கஜா ஆகியோர் அதிகாரிகளை சந்தித்துவிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துஆலோசனையின் அடிப்படையில் மேலும் இது சம்பந்தமாக வரும் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை சந்தித்து முறையீடு செய்வது என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வேல முருகன் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.