கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் நேருக்கு நேராக உங்கள் பகுதியின் குறைகளையும், கேள்விகளையும் 044-35021334 என்ற எண்ணில் பதிவு குரலின் வழிகாட்டுதல்படி பதிவு செய்யலாம் என்று பொள்ளாச்சி நகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்த பொதுமக்கள் அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்து தமிழ் திசை நாளிதழின் தெருவிழா நிகழ்ச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பார்க்கில் நடைபெற்றதில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நகர மக்கள் தொலைபேசியில் விடுத்த பல்வேறு கோரிக்கைகளும், நேரில் அளித்த மனுக்களுக்கும் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் உரிய தீர்வையும், விளக்கத்தினையும் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர், நகர்நல அலுவலர், நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.