பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் நல்விடியல் சமூக அறக்கட்டளையினர் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ உதவி, ரத்த தானம், கல்வி உதவி மற்றும் பல உதவிகளை இடைவிடாது செய்து வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக நேற்று நல்விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் கோவை சிங்காநல்லூர் NG மருத்துவமனை மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமை பொள்ளாச்சி சப் கலெக்டர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் அவர்கள் மற்றும் பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் NG மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் C. மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
இம்மருத்துவ முகாமிற்கு பொள்ளாச்சி நல்விடியல் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் முத்துபாய் அவர்கள் தலைமை தாங்கினார்.. இம்மருத்துவ முகாமில் 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.