இலங்கையில் 2009ஆம் ஆண்டு சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அதனுடைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் பொள்ளாச்சியில் தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் H.M.முஹம்மது ஹனீபா அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் ராஜா ஜமேஷா, ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன், நகரத் துணைச் செயலாளர் அன்சர், நகர தொழிற்சங்கத் தலைவர் அஸ்ரப் அலி, மாவட்ட வணிகர் சங்க துணைச் செயலாளர் முகமது உசேன், நகர பொருளாளர் அப்துல் காதர், நகர வணிகர் சங்க செயலாளர் அபூபக்கர் சித்திக், தொழிற்சங்க துணைத்தலைவர் வசந்த், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் அப்பாஸ், சகாபுதீன், முகமது ஆரிப் சமூக இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள் தமிழுணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.