கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த டாப்சிலிப்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 22ஆம் தேதி உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சியை வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் பல்வேறு நாட்டு நாணயங்கள் இடம் பெறுகின்றன. இந்த அரிய வகை கண்காட்சியை காண பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-M.சுரேஷ் குமார்.