கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி ஊராட்சி.
இங்கு சுமார் 2,000க்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர்.
இந்த புளியம்பட்டி பகுதியில் மருத்துவகழிவுகள் மற்றும் பல்வேறு குப்பைகள் சாலையோரங்களில் கொட்டப்படுவதாக புகார் இருந்து வருகிறது.
இதை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், சாலையோர பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக’ மாறியுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.