பொள்ளாச்சி NGM கல்லூரி M,com(CA) மாணவர்களின் சமூக அக்கறை..!! கல்லூரியின் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் சேவை நெஞ்சம் நெகிழ வைக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள NGM கல்லூரியில் முதுகலை படிப்பை தொடரும் M,com மாணவர்கள் சமூக அக்கறையுடன் பொள்ளாச்சியில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு போர்வை,ப்ரெட் வழங்கினர்.
வருடம்தோரும் கல்லூரி சுற்றுலா செல்லும் இவர்கள்,சுற்றுலா சென்று வந்த உடன் ,செலவு போக மீதம் உள்ள பணத்தை கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் திருப்பி கொடுத்து உள்ளது.
பணத்தை செலவு செய்யாமல் மாற்றி யோசித்த மாணவர்கள் அந்த பணத்தில்,மழை காலத்தில் குளிரில் தவித்து வரும் ஆதரவற்ற 50 முதியவர்களுக்கு போர்வை வழங்கி சேவையை செய்தனர். நிகழ்வை சமூக ஆர்வலரும் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தொடக்கி வைத்தார்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு மாணவ மாணவிகள் போர்வை,ப்ரெட் கம்பளி வழங்கினர்.இதன் மதிப்பு 12000 ஆயிரம் ரூபாய் ஆகும்.
டீன் ஏஜ் என்றால் ஆட்டம் பாட்டம் என இல்லாமல் ,நாங்கள் இப்படியும் செய்வோம் என தமிழகம் அல்ல இந்திய அளவில் யோசிக்க வைத்த பொள்ளாச்சி NGM M,com CA மாணவர்கள் அவர்கள் சமூகத்தின் மேல் உள்ள அக்கறை பாராட்டுதல் உரியது என சமூக ஆர்வலர் வெள்ளை நடராஜ் கூறினார்.
M,com(CA) மாணவர்கள் ஆதரவற்ற மக்களுக்கு எப்போதும் எங்கள் சேவை தொடரும் என கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.
One Response
Great job don by our college mates