போத்தனூர் நூராபாத் அமீர் சாஹிப் வீதியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் மாநகராட்சி கண்டுகொள்ளுமா…
பொதுமக்கள் தினந்தோறும் பயண்படுத்தும் நூராபாத் அமீர் சாஹிப் வீதியில் வீடு கட்டுமான வேலை நடைபெற்று வருகிறது, பொதுமக்கள் பயண்படுத்தும் சாலையின் நடுவில் எம் சேன்ட், செங்கல், போன்ற கட்டுமாண பொருட்கள் கொட்டி சாலை முழுவதும் மறித்து ஆக்கிரமித்துள்ளார்கள்,
இதனால் வாகனம் செல்லவும் முடியாமலும் நடந்து செல்லவும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்து காதர் குறிச்சி.