கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் புதூரை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மனைவி 74 வயதான தனலட்சுமி. இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்,
அப்போது வாலிபர் ஒருவர் தனலட்சுமியின் பின்னால் வந்து திடீரென தனலட்சுமியின் கழுத்தில் 7½ பவுன் தங்க நகையை பறிக்க முயன்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி நகையை கையால் பிடித்து கொண்டார். பின்னர் சத்தம் போட்டுள்ளார்.
அவரின் சத்தத்தை கேட்டு அருகில் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் பயந்துபோன அந்த வாலிபர் மூதாட்டியை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
,இதுகுறித்து தனலட்சுமி தொண்டாமுத்தூர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த நகை பறிப்பில் ஈடுபட முயன்ற வாலிபரை தேடி வந்தனர். அப்போது தொண்டாமுத்தூர் மல்லிகை நகரைச் சேர்ந்த பெயின்டர் 23 வயதான பிரபாகரன் என்பவர் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.