மேட்டூர் அணை வரலாற்றில்மே மாதத்தில் தண்ணீர் திறந்துவிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்தடைந்த
தமிழக முதல்வர் மேட்டூருக்கு இரவு வந்தடைந்தார். அங்கிருக்கும் ஆய்வுமாளிகையில் தங்கி
டெல்டா பகுதிகளின் நிலவரங்களை காணொளி வாயிலாக கேட்டரிந்த முதல்வர் இன்று காலை 11.மணியளவில் மேட்டூர் அணையை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,முன்னாள் அமைச்சர் டி. எம். செல்வகணபதி,சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகேபி.சின்ராஜ், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர்.பார்த்திபன்,சேலம் மேயர் ராமச்சந்திரன்,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ்,
விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணிதுறை மின்சாரத்துறை நீர்வளத்துறை சேலம் மாவட்ட நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு இதழுக்காக
-ச.கலையரசன் , மகுடஞ்சாவடி.