தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாட்டிகன் நகரில் நேற்று மே 15ம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தமிழ்நாட்டு மகளிர் அணி தலைவர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் அழைக்கப்பட்டிருந்தார். மேலும், புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழில் மன்றாட்டு வாசிக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாட்டிகன் நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த மார்ட்டின் லீமாரோஸ்க்கு கோவை விமான நிலையத்தில் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனி ஊழியர்கள் உறவினர்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஆக்ருதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாட்டிகன் நகரில் நடைபெற்ற, தமிழகத்தை சேர்ந்த தேவ சகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மன்றாட்டு வாசிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டது மறக்க முடியாத அனுபவம். உலக அமைதிக்காகவும் மக்களுக்காகவும் ஜெபித்து வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
– சீனி,போத்தனூர்.